shadow

13 ஆண்டுகளாக கமல் ஏன் ரயிலில் வரவில்லை: டி.ராஜேந்தர் கேள்வி

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருச்சிக்கு ரெயில் மூலம் சென்றார். இதற்கு இலட்சிய திமுக கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர், 13 ஆண்டுகளாக கமலுக்கு ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மேலும் டி.ராஜேந்தர் பேசுகையில், ‘காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து கமல்ஹாசன் திருச்சிக்கு சென்றிருக்கிறார். என்ன பேசப்போகிறார், ஏது பேசப்போகிறார் என்று தெரியாமல் சென்றிருக்கிறார். 13 வருடமாக ரெயில் போகாதவர் இப்போதுதான் சென்றிருக்கிறார். நான் 1980ல் ஒரு தலை ராகம் படம் வெளியானது. அப்போதிலிருந்து ரெயிலில் தான் சென்று கொண்டிருக்கிறேன்.

13 வருடமா ரெயில்வே ஸ்டேஷன் கமலுக்கு தெரியாதா?, ஏன் டிக்கெட் கிடைக்கலயா? அவருக்கு ரெயில்வே பட்ஜெட்டை பற்றி தெரியுமா? ஸ்டெர்லைட்டை விஷயத்தை இரட்டடிப்பு செய்கிறோம். ஆனால், அவர் ரெயிலில் போனது பெரிய விஷயமா?

ஷகிலா வந்தால் கூட கூட்டம் சேரும், வடிவேலு வந்தால் கூட கூட்டம் சேரும். ஆனால், ஓட்டு விழுமா? இப்போது எல்லாம், 6 ஆயிரம், 4 ஆயிரம் கொடு என்று மக்கள் கேட்கிறார்கள். கோடி கோடியாய் பணம் இருந்தால் தான் தற்போது அரசியல் செய்ய முடியும்’ என்றார்.

Leave a Reply