shadow

tr baluதிமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான  டி.ஆர்.பாலு இருதய கோளாறு காரணமாக நேற்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த மும்பை மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து நேற்று மாலை டி.ஆர்.பாலு மும்பை  பிரெசிடென்ட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று டி.ஆர்.பாலுவிற்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அவரது உடல்நலத்தை அவரது உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருவதாக மும்பையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டி.ஆர்.பாலுவின் உடல் நலம்  பற்றி தெரிந்து கொள்வதற்காக இன்று திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுகவின் பொருளாளருமான மு.க. ஸ்டாலின் மும்பை விரைகிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து 8.40 மணிக்கு மும்பை செல்லக்கூடிய விமானத்தில் அவர் பயணம் செய்தார். அவருடன் முரசொலி செல்வம், சுகவனம் ஆகியோர் சென்றனர். மும்பையில் இன்று தங்கி இருக்கும் அவர் நாளை சென்னை திரும்புகிறார்.

Leave a Reply