சுவிஸ் பந்து பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இந்த வகையில் இந்த பயிற்சி கால்களை வலிமையாக்கி, கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய உதவுகிறது.

பயிற்சி செய்முறை
முதலில் விரிப்பில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். சுவிஸ் பந்தை கால் பாதத்திற்கு இடையே வைத்து கொள்ளவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை மெதுவாக மேல் நோக்கி தூக்கி கீழே இறக்கவும்.

இவ்வாறு ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்றாக பழகிய பின்னர் 25 முதல் 30 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் கால்கள் நன்கு வலிமையடைந்து, கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைந்திருப்பதை காணலாம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *