shadow

ஜனவரி 1 முதல் ரயில் டிக்கெட் எடுப்பதில் திடீர் மாற்றம்

indian-Railwaysரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டபோதிலும் நிலைமை இன்னும் சரியாகவில்லை. அதுமட்டுமின்றி இயல்பு நிலை திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் விருப்பமோ, விருப்பமில்லையோ எல்லோரும் ஆன்லைன், மற்றும் ஸ்வைப்புக்கு மாறியே தீரவேண்டிய நிலை உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் ஸ்வைப் மிஷின் வசதியை ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் இந்தியன் ரயில்வேயும் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. ஆம் இனி ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டுமானால் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்தால் போதும், டிக்கெட் கிடைத்துவிடும். இந்த வசதி வரும் ஜனவரி 1 முதல் தொடங்கவுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்காக 15 ஆயிரம் ஸ்வைப் இயந்திரங்களை எஸ்.பி.ஐ. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளிடம் இந்தியன் ரயில்வே கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply