shadow

 Sweden Recognizes Palestineபாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஸ்வீடன் நாட்டிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பாலஸ்தீனம்-இஸ்ரேல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பாலஸ்தீனம் நாட்டை தனி நாடாக ஐ.நா. அமைப்பு  அங்கீகரித்தது. ஐ.நாவை தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்து வரும் நிலையில் நேற்று பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கின்றோம் என  ஸ்வீடன் அதிரடியாக அறிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையை பெற ஸ்வீடன் அளித்துள்ள அங்கீகாரம் உதவும் என்று ஸ்வீடன் தெரிவித்துள்ளது. ஸ்வீடனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், ஸ்வீடன் நாட்டில் இருந்த இஸ்ரேல் தூதரை உடனடியாக வாபஸ் பெற்றது. மேலும் இஸ்ரேல் நாட்டில் உள்ள ஸ்வீடன் தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது.

ஸ்வீடனின் இந்த நடவடிக்கை ஆலோசிக்காமல் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்று அமெரிக்காவும் விமர்சனம் செய்துள்ளது. ஆனால் ஸ்வீடனின் முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச் சலான முடிவு என பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Leave a Reply