Chennai Today News

பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்

பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்

ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் தங்களுக்கு திரையுலக பிரமுகர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் கூறி வரும் நிலையில் நடிகை சுவரா பாஸ்கர் என்பவரும் இதுகுறித்த புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கர் தனக்கு தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தஹ்டாக புகார் கூறியுள்ளார். ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளிவந்தது. இந்தி பட உலகில் வளரும் கதாநாயகியாக அவர் உள்ளார்.

இதுகுறித்து பாஸ்கர் பாஸ்கர் கூறியதாவது:- ‘‘பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார். நான் அதை அனுமதிக்கவில்லை. திரையுலகில் இதுமாதிரி செக்ஸ் தொல்லைகள் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!