shadow

vasundaharaஐ.பி.எல் ஊழலில் சிக்கி, தலைமறைவாக இங்கிலாந்து நாட்டில் இருப்பதாக கூறப்படும் லலித்மோடிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமின்றி அவருடைய குடும்பமே உதவியதாக வெளிவந்த செய்தியால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அவர்களும் லலித மோடிக்கு உதவியாத வெளிவந்த செய்தியால் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லலித் மோடி, கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிட்டனில் குடியேறுவதற்கு, அப்போது ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வசுந்தரா ராஜே உதவியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பிரிட்டன் அரசுக்கு அவர் அனுப்பிய இமெயில் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், தனது பெயரை இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று வசுந்தரா ராஜே கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வசுந்தரா ராஜே, “லலித் மோடியின் குடும்பத்தினரை எனக்கு நன்கு தெரியும்; இருப்பினும், ஊடகங்கள் எந்த ஆவணம் குறித்துப் பேசுகின்றன என எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தகவல் குறித்து லலித்மோடி ஒரு பேட்டியில் கூறியபோது, “முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல முறைகேடு புகார்களில் என்னைச் சிக்க வைத்தது. அந்தச் சூழ்நிலையில், எனது மனைவியின் சிகிச்சைக்காக, சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோரிடம் உதவி கோரினேன்.
 நான் பிரிட்டனில் குடியேற வசுந்தரா ராஜே எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்து உதவி செய்தார். என் மனைவி சிகிச்சைக்காக போர்ச்சுகலில் இருந்தபோது, வசுந்தராவும் உடனிருந்தார். சுஷ்மா ஸ்வராஜையும், அவரது குடும்பத்தினரையும் எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்.  வெளிநாடு செல்வதற்கான பயண ஆவணங்கள் பெறுவதற்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேல், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் எனக்கு உதவி செய்தனர்.  என் மீதான முறைகேடு புகார்களை அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும் என்று லலித் மோடி கூறினார்

Leave a Reply