shadow

sushmaஉலகிலேயே மிக அதிகமான டுவிட்டர் பாலோயர்களை வைத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெற்று சாதனையை அடைந்துள்ளார். அவருடைய டுவிட்டர் பக்கத்தை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர். இந்த பட்டியலில் ஐக்கிய அரபு குடியரசின் வெளியுறவு துறை அமைச்சர்  13 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களுடன் 2வது இடத்திலும், வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சர்  7 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

உலக தலைவர்களை பொருத்தவரை பாரத பிரதமர் மோடி 83.9 லட்சம் பாலோயர்களை பெற்று 3வது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா 49.1 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில் சுஷ்மாவை பின் தொடர: //twitter.com/sushmaswaraj

Leave a Reply