shadow

 தோனி கேரக்டரில் நடித்தவர்

மும்பையில், இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தற்கொலை என்ற தகவல் பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“M.S. Dhoni: The Untold Story” படத்தில் தோனி கேரக்டரில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனையடுத்து சற்றுமுன் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

34 வயதே ஆன சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் இந்தியத் திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இளம் நடிகர் ஒருவரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *