shadow

சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ‘சிங்கம்’ செய்தி

surya-1சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம் 3’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போவதால், டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே ‘சிங்கம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளி வைக்கப்படும் என்றும் அதாவது டிசம்பர் 23ஆம் தேதி ‘எஸ் 3’ படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை எனினும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்த தகவலை பரப்பி வருகின்றனர். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Leave a Reply