shadow

சூர்யாவின் ’24’ பட டீசர் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்
surya-24-movie-fan-poster
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மாஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘பசங்க 2′ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இருப்பினும் இந்த படத்தில் அவர் ஒரு தயாரிப்பாளராகத்தான் வெற்றி பெற்றார். எனவே ஒரு நடிகர் என்ற முறையில் வெற்றி பெற ஒரு சூப்பர் ஹிட் படம் தேவை என்ற நிலையில்தான் தற்போது ’24’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய ’24’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகவுள்ளது. படத்தின் அதிரடியான காட்சிகளும், ஏ.ஆர்.ரஹ்மானின் அபாரமான பின்னணியிலும் இந்த டீசர் உருவாகியிருப்பதாகவும், இந்த டீசரில் சூர்யாவின் ஐந்து வித்தியாசமான கெட்டப்புகள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 14-ல் விஜய்யின் ‘தெறி’ ரிலீஸ் ஆகவுள்ளதால் இரண்டு வார இடைவெளியில் ’24’ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply