shadow

sathurangaபிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நட்ராஜ் நடித்த சதுரங்க வேட்டை திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்ட நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிப்பது நட்ராஜ் இல்லை. அவருக்கு பதிலாக சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரிக்கவுள்ள இந்த படத்தை வினோத் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை கேட்ட சூர்யா, சதுரங்க வேட்டை பாணியில் இந்த கதை இருப்பதால் சதுரங்க வேட்டை 2 என்று தலைப்பு வைக்க ஆலோசனை கூறியதாகவும், அதையடுத்து இந்த படத்தில் அதே பெயரை வைக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

மாஸ், 24, சிங்கம் 3, ரஞ்சித் இயக்கும் படம் என சூர்யாவுக்கு வரிசையாக படங்கள் உள்ளதால் சதுரங்க வேட்டை 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 2016ஆம் ஆண்டில்தான் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply