நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை: சூர்யா டுவிட்

‘ஜெய்பீம்’ படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என சூர்யா டுவிட் செய்துள்ளார்.

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்திற்கு பாமகவினர் உள்பட ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஒட்டுமொத்த திரையுலகம், அரசியல் பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூறியதாவது: ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மீது நீங்கள் அளிக்கும் அன்பு அபரிதமானது என்றும் இதற்கு முன்பு நான் இதுபோன்று பார்த்ததே இல்லை என்றும் நன்றியை வார்த்தைகளால் விவரிக்கவே முடியவில்லை என்றும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி