கார்த்தி படத்தை தயாரிக்கின்றார் சூர்யா

surya karthiபிரபல நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் நிலையில் இருவரும் இணைந்து விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை சூர்யா தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சூர்யா, முதன்முதலில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற படத்தை தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். அந்த படம் ஓரளவு நல்ல கலெக்ஷனை கொடுத்ததை அடுத்து ‘பசங்க 2’ என்ற படத்தையும் தயாரித்து தான் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் என்பதையும் சூர்யா நிரூபித்தார்.

இந்நிலையில் சூர்யாவின் 3வது தயாரிப்பான ’24’ என்ற திரைப்படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல வெற்றி பெற்று சூர்யாவுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. எனவே தற்போது சூர்யாவின் அடுத்த தயாரிப்பில் அவரது சகோதரர் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்துக்காக அவர் பிரபல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தபின்னர் அவர் சூர்யாவின் தயாரிப்பில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *