Chennai Today News

சச்சின், சேவாக் கூட குள்ளர்கள்தான். சூர்யா ரசிகர்கள் பதிலடி

சச்சின், சேவாக் கூட குள்ளர்கள் தான். சூர்யா ரசிகர்கள் பதிலடி

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் சன் மியூசிக் சேனலில் சூர்யாவின் உயரம் குறித்து கலாய்த்த ஒரு விஷயத்திற்காக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சன் டிவி அலுவலகத்தின் முன்பு போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் சூர்யா மட்டுமின்றி உலகில் சாதனை செய்த பலர் குள்ளர்கள் தான் என்று சூர்யாவின் ரசிகர்கள் டுவிட்டரில் பட்டியலிட்டு வருகின்றனர். சச்சின், சேவாக், ஜாக்கி சான், சார்லி சாப்ளின், உள்பட பலரையும் குறிப்பிட்டு உயரத்தில் குள்ளமாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் சாதனையில் பெரியவர்கள் என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பஸ் கட்டண உயர்வு போன்ற மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சூர்யாவின் ரசிகர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!