shadow

சூர்யா-கார்த்தி படத்தை இயக்கும் பாண்டிராஜ்

பிரபல இயக்குனர் பாண்டிராஜ், கடந்த சில வருடங்களாக சூர்யாவையும் கார்த்தியையும் இணைத்து ஒரு படத்தை இயக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கான காலம் இன்னும் கனிந்து வரவில்லை

இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் விவரங்களுடன் கூடிய அறிக்கை வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதன்மூலம் பாண்டிராஜின் நீண்ட நாள் முயற்சி நிறைவேற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply