shadow

சூர்யா-கார்த்தி இணையும் முதல் படம்
surya karthi
சிவகுமாரின் இரண்டு மகன்களான சூர்யாவும் கார்த்தியும் தனித்தனியே நடித்து பல ஹிட்களை கொடுத்து வந்தபோதிலும் நல்ல கதை அமைந்தால் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்போம் என அவ்வப்போது கொடுத்த பேட்டியில் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் முதல்முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட ஒரு படத்தில் இளையதலைமுறை நடிகர்கள் அனைவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக விஷால் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களிலும் ஆர்யா மற்றும் ஜீவா சிறப்பு தோற்றங்களிலும் நடிக்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியதால் கிடைத்த லாபத்தில் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டு மீதிப்பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் லாபத்தையும் சேர்த்து நடிகர் சங்கத்திற்கு என புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply