shadow

ரொம்ப கலாய்க்காதீங்க! ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் கெஞ்சல்

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த படத்தின் டைட்டில் தவிர வேறு எந்த தகவல்களும் வெளிவரவில்லை. ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் என எந்த அறிவிப்பும் இல்லாததால், சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவனை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அவருக்கு நயன்தாராவை லுக் செய்யவே நேரம் இல்லை, பின்னர் எப்படி சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட நேரம் கிடைக்க்கும்? போன்ற மிமிக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் நேற்று விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் சூர்யா கேரம்போர்டு விளையாடுவது போன்ற ஒரு ஸ்டில்லை வெளியிட்டு அதில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுவரை வெளியான ‘மிமீஸ் போதும், இன்னும் சில நாட்களில் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடுகிறேன்’ என்று ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார். இதனால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply