shadow

அஜித் தலக்கணம் இல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா? சுரேஷ் மேனன் விளக்கம்

தல அஜித் என்றாலே அவருடைய நடிப்பை நேசிப்பவர்களை விட அவரது தலக்கணம் இல்லாத பண்பையே பலர் நேசிப்பார்கள். அஜித்தின் நடிப்பை பிடிக்காதவர்கள் கூட அவரது பண்பை ரசிப்பார்கள்.

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் இடத்தை நெருங்கிவிட்டபோதிலும் அவர் எளிமையாக இறுமாப்பு இல்லாமல் இருப்பதன் ரகசியத்தை தான் தெரிந்து கொண்டுவிட்டதாக பிரபல இயக்குனர் சுரேஷ் மேனன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார்.

அவர் கூறியது இதுதான்: அஜித்தின் பெற்றோரை சமீபத்தில் சந்தித்தேன். அவர்களை சந்தித்த பின்னர்தான், அஜித் தலக்கணம் இல்லாமல் பல நல்ல குணங்களை எங்கிருந்து பெற்றார் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன். அவருடைய பெற்றோர்கள் அந்த அளவுக்கு எளிமையின் சிகரமாக விளங்கினர்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்துடன் இணைந்து பணிபுரியும் போது எப்படி கனிவான, எளிமையான, அன்பான நபராக இருந்தாரோ, அதே போல் இன்று உச்சத்தில் இருக்கும்போது இருக்கின்றார் என்றும், கூறினார். அஜித் கடந்த 1990-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுரேஷ் மேனன் இயக்கிய விளம்பர படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply