shadow

பாஜகவில் அஜித்தின் ரீல் அண்ணன் இணைந்தார்

sureshபிரபல மலையாள நடிகரும் அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்தவருமான சுரேஷ் கோபி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் முன்னிலையில் நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பாஜகவை வளர்க்க தான் பாடுபடப்போவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக சுரேஷ்கோபி தீவிர பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் பாஜகவின் உதவியால் ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார்.

Leave a Reply