shadow

சன் டிவி சொத்து முடக்கம். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

supreme courtசன் டிவி நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து சன் டிவி தொடர்ந்த வழக்கில், இந்த வழக்கில் 2ஜி வழக்கை கண்காணிக்கும் சிறப்பு அமர்வு முடிவெடுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சன் டிவி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை தற்காலிகமாக முடக்கி வைக்க அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உத்தரவுப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சன் டிவி நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட சமீபத்தில் மறுத்துவிட்டது.

இதனை அடுத்து சன் டிவி சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மேல்முறையீடு செய்தது. சொத்துகளை தற்காலிகமாக முடக்கிவைத்து அமலாக்கத்துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சன் டிவி தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் அடங்கிய அமர்வு தங்கள் தீர்ப்பில் கூறியபோது, “2ஜி வழக்கு தொடர்புடையது என்றால் அதில் நாங்கள் முடிவெடுப்பது முறையாக இருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மாவின் கருத்தைக் கேட்டனர்.

அவர், ‘2ஜி வழக்கின் விசாரணையில் வாதங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் மனுதாரரை மிரட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று அமலாக்கத் துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 13 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்’ என்று உத்தரவாதம் அளித்தார்.

இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை 2ஜி வழக்கை கண்காணிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான சிறப்பு அமர்வு 2ஜி வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply