shadow

கல்வித்தகுதி இருந்தால்தான் தேர்தலில் போட்டி. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
Supreme-Court
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட கல்வித்தகுதி வேண்டும் என்றும் ஆண்களுக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியும், பெண்களுக்கு 8-ம் வகுப்பு மற்றும் தலித் வகுப்பினருக்கு 5-ம் வகுப்பு கல்வித்தகுதியும் இருக்க வேண்டும் என ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து ஹரியானா மாநில பெண் அமைப்புகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், ” ஹரியானா மாநிலத்தில் உள்ள 20 வயதை தாண்டிய கிராமப்புற பெண்களில் 83.06 சதவீதத்தினர் புதிய சட்டத்திருத்தத்தின்படி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான கல்வித் தகுதியை கொண்டிருக்கவில்லை என்றும் அதனால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழப்பதாகவும், நகர்ப்புறங்களில் உள்ள 67 சதவீதம் பெண்களும் இதே சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த இவ்வழக்கை இன்று விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் , ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்தது சரியானதே என்று கூறி பெண்கள் அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தேர்தலில் மட்டுமின்றி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் கல்வித்தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply