shadow

rajiv-gandhi-s-killersமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பி ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர்களையும் விடுதலை செய்யும் வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர்களையும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
 
இது தொடர்பாக, ஜுலை 9ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, 7 பேரின் விடுதலைக்கு தற்போது ஆட்சி செய்யும் மோடி அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு கிடையாது என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அனைத்து மாநில அரசுகளும் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்விடம் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply