shadow

நீட் தேர்வில் விலக்கு கிடையாது: மத்திய அரசு பல்டியால் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

நீட் குறித்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு திடீரென நீட் தேர்வுக்கு ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் ஒரு ஆண்டு விலக்கு கோரும் தமிழக அரசின் மனு மற்றும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சிபிஎஸ்சி மாணவர்களின் மனு ஆகியவற்றின் மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்ற பிறகு, ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கும் ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக அரசு கட்டாயமாக உடனே செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு ஓராண்டுக்கு விலக்கு கோரி அவசரச் சட்டம் இயற்றினால் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று கூறிய மத்திய அரசு இப்போது தலைகீழான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

 

Leave a Reply