shadow

dmdkஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவதிலிருந்து பவானி சிங்கை, விடுவிக்கக் கோரும் தேமுதிகவின் மனுவை அவசர மனுவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

இது தொடர்பாக தேமுதிக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞரான பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அவர் சரியாக வாதாடவில்லை என்றும், அதனால், அந்த வழக்கின் மேல்முறையீட்டிலும் பவானி சிங்கே ஆஜரானால், அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும் என்றும், இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

தேமுதிகவின் மனு மீதான விசாரணை டிசம்பர் முதல் வாரத்தில் வர உள்ள நிலையில், இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று ஏற்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட், மனுதாரருக்கு அவரசம் எனில், கர்நாடகா ஐகோர்ட்டையோ அல்லது சுப்ரீம் கோர்ட் பதிவாளரையோ மனுதாரர் அணுகலாம் என  உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply