shadow

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கும் உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி கருத்து

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்களை போலவே பெண்களுக்கும் வழிபட அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இறைவழிபாடு என்பது ஆண்களை போல பெண்களுக்கும் பொருந்தும் என்றும், இதில் பாலின பாகுபாடு கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பு என்பது சட்டத்திற்கு எதிரானது என்று கூறிய நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கின் விசாரணையின் இடையில் ‘எந்த அடிப்படையில் கோவில் நிர்வாகிகள் பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கின்றார்கள் என்றும், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், பொதுமக்களுக்காக கோவில் நடை திறந்தால், யார்வேண்டுமானாலும் செல்லலாம் என்பதுதான் நியதி என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply