குடியுரிமை சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! போராட்டம் முடிவுக்கு வருமா?

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. இவற்றில் திமுக மற்றும் மக்கள்நீதிமய்யம் தாக்கல் செய்த மனுக்களும் அடங்கும்

இந்த நிலையில் இந்த மனுக்கள் அனைத்தையும் இன்று ஒன்று சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணையின்போது குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மத்திய அரசு இந்த மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

மேலும் இந்த வழக்கு ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் தலையிட்டு இருப்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது

Leave a Reply