உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் பரபரப்பு புகார்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்தித்து, தலைமை நீதிபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையான நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் செல்லமேஸ்வர், ரஞ்சன், கோகாய், மதன் லோகுர் உள்ளிட்ட 4 பேர் டெல்லியில் பேட்டியளித்தனர்.

இந்திய நீதித்துறையின் அசாதாரண நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நீடிக்காது என்று தெரிவித்தார்.

எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை நாங்கள் 4 பேரும் அனுப்பினோம். இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்களது குறைகளை முறையிட்டோம். ஆனால் எந்தவித பலனும் இதுவரை கிடைக்கவில்லை.

நீதித்துறையின் மாண்புகளை குலைக்கும் வகையில், சில நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதிபதிகள் நியமன நடைமுறைகள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து, நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதன்மூலம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது உச்சநீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *