வழக்கறிஞர்கள் குண்டர்களை போல நடந்து கொள்வதா? பாட்டியாலா சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம்
supremecourt
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா உள்பட ஒருசில மாணவர்களை இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போது, மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாகவும், அந்த நீதிமன்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பத்து நிமிடங்களில் தகவல் தெரிவிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவரான கன்னையா மீது சமீபத்தில் தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று காலை கன்னையா குமார் விசாரணைக்கு ஆஜராகும் போது, நீதிமன்றத்தில் வெளியாட்கள் நுழைய சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதையடுத்து மாணவர் கன்னையா உள்ளிட்ட 3 பேர் இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் கன்னையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் பெரும் அமளி ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் நடைபெற்றதாகவும், அதில் பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்து 10 நிமிடத்தில் தெரிவிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கறிஞர்கள் குண்டர்களைப் போல செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், உடனடியாக அங்கு உள்ளூர் காவல்துறை ஆணையரை நியமிக்கலாமா என்றும் கேள்வி எழுப்பினர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *