கேரள அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு

tasmacதமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராடிய அரசியல் கட்சிகள் தற்போது அந்த பிரச்சனையை சுத்தமாக மறந்துவிட்டன. இந்நிலையில் கேரளா அரசு சமீபத்தில் மதுவிலக்கு கொள்கையை அறிவித்தது. ஆனால் அரசின் அறிவிப்புக்கு எதிராக மதுபான உரிமையாளர்களால் தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி அடங்கிய அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மக்களின் நலன் கருதியே மதுவிலக்கு கொள்கையை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. அரசின் முடிவில் மதுபான வியாபாரிகள் தலையிட முடியாது” என்றனர்.

கேரள அரசு சார்பில் வாதாடிய நீதிபதி கபில் சிபல், “அரசின் கொள்கை முடிவுகள் சோதனை அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் அந்த முடிவு முழுமையாக வெற்றி பெறலாம், முழுமையாக தோல்வியும் பெறலாம். அல்லது பகுதி வெற்றியோ பகுதி தோல்விக்கும் கூட வாய்ப்பு இருக்கிறது. சூழ்நிலையப் பொருத்தது கொள்கை முடிவுகளின் தாக்கம் அமையும்.

இருப்பினும் கேரளாவை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் இலக்கு. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் காலை 8.30 மணியளவில் மதுக்கடைக்கு வந்து வரிசையில் நிற்பதைப் பார்த்த பிறகே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கேரளா சுற்றுலா தலம். எனவே மதுக்கடைகளுக்கு தடை விதிக்கக்கூடாது என மதுபான உரிமையாளர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். ஆனால், கேரளாவுக்கு மது அருந்துவதற்காக மட்டுமே யாரும் வருவதில்லை. அது ஒரு அழகான மாநிலம் என்பதாலேயே வருகின்றனர். வெளிநாட்டுப் பயணிகளுக்காக 5 நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்கலாம் என அரசே தெரிவித்துள்ளது” என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *