shadow

supreme courtஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்  இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது. இதனால் சிறையில் இருந்து ஜெயலலிதா இன்று அல்லது நாளை வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால் உடனடியாக 6 தமிழக அமைச்சர்கள் இன்று பெங்களூருக்கு பயணம் ஆகின்றனர். அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்டு வரும் மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன், ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைத்தது. மேலும், மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், 3 மாதத்தில் விசாரித்து  முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply