shadow

ஜெயலலிதாவின் முன் ஜாமீன் வழக்கு. முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

jayaஜெயலலிதா உள்பட நான்குபேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் பெற்றார்.

அந்த ஜாமீன் இன்றுடன் முடிவடைந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலைஎன்று அறிவித்துவிட்டதால், இந்த ஜாமீன் வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

தற்போது இதே வழக்கை கர்நாடக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் திமுகவும் தனியாக மேல்முறையீடு செய்தது. ஆனால் இந்த இரு மேல்முறையீட்டு மனுவில் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற பதிவாளர், தவறுகளை திருத்திய பின்னர் மீண்டும் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். எனவே கர்நாடக அரசு வழக்கறிஞர்களும், திமுக வழக்கறிஞர்களும் தங்கள் மனுவின் தவறுகளை தற்போது திருத்தி வருகின்றனர்.

Leave a Reply