shadow

subramanian-swamy-4தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் இலங்கை கடற்படையினர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஆகியவை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சுப்பிரமணியம் சுவாமி மீது ஐந்து அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சுப்பிரமணியசாமி மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்ய சொன்னது தான்தான் என்றும், மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி அதை பத்திரிகைகளில், செய்தியாக்குவதைத் தவிர, தமிழக அரசு வேறெதுவும் செய்யவில்லை என்பது உள்பட சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, சுப்பிரமணியசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் 5 வழக்குகளையும் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதே போன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, ஆகியோர் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முன்னதாக இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply