shadow

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை ஆவார்களா? 5 பேர் கொண்ட புதிய அமர்வு முடிவு செய்யும்

rajiv-gandhi-s-killersகடந்த 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை நேற்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை தமிழக அரசு நினைத்தால் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனையடுத்து தமிழக அரசும் 4 பேரையும் விடுதலை செய்து அறிவித்தது. ஆனால் இதற்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து, மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வை சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்துள்ளது. இந்த அமரிவில் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை குறித்த வழக்கை வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவார்கள் எனத் தெரிகிறது.

Leave a Reply