shadow

Kochadaiyaan-Movie-Stills-27சென்னையில் உள்ள அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் கோச்சடையான் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வரும் 9ஆம் தேதி பிரமாண்டமான ஒப்பனிங்குடன் கோச்சடையான் திரைப்படம் வெளியாக உள்ளது. கோச்சடையான் ரிலீஸ் ஆவதால் இந்த வெள்ளிக்கிழமை வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு திரைப்படங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கோச்சடையான வெளியாக உள்ள தியேட்டர்களின் விபரங்கள்:

சத்யம் காம்ப்ளக்ஸ்: சத்யம், சாந்தம், செரீன்
தேவி: தேவி மற்றும் தேவிபாரடைஸ்
அபிராபி: அனைத்து நான்கு தியேட்டர்கள்
உதயம்: உதயம்,சூரியன்,சந்திரன்
எஸ்கேப்: அனைத்து மூன்று தியேட்டர்கள்
ஐநாக்ஸ்: மூன்று தியேட்டர்கள்
உட்லண்ட்ஸ்: 2 தியேட்டர்கள்
பிவிஆர். 3 தியேட்டர்கள்
கமலா : 2 தியேட்டர்கள்
பெரம்பூர் S 2: 3 தியேட்டர்கள்

மேலும் ஒரே தியேட்டர்களாக இருக்கும் ஏவிஎம் ராஜேஸ்வரி, ஐடிரீம்ஸ்,பாரத், மகாராணி போன்ற தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. கிட்டத்தட்ட சென்னை நகர் முழுவதிலும் உள்ள தியேட்டர்களை கோச்சடையான ஆக்கிரமித்துவிடும் என கூறப்படுகிறது. மேலும் பல தியேட்டர்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 3 D மற்றும் 2D ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் கோச்சடையான் ரிலீஸாக உள்ளது.

Leave a Reply