முதல்வரை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

rajinikanthதமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் டெல்லி தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய சென்னை அப்பல்லோவுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்,

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மாலை 6.30 மணி அளவில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் காரில் வந்தார். இதனை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களை சந்தித்த அவர்,அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருந்த திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

ரஜினியின் வருகையை அடுத்து இன்னும் ஒருசில திரையுலக பிரபலங்களும் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *