ஆர்.எம்.வீரப்பனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த ரஜினிகாந்த் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்
ரஜினியின் ‘பாட்ஷா’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். பல வருடங்களாக ஆர்.எம்.வீரப்பனுடன் நட்புடன் இருக்கும் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் களமிறங்க உள்ள நிலையில் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்துள்ளார்
இந்த சந்திப்பின்போது இருவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.