shadow

warnerநேற்று பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் ஆக்ரோஷமாக மோதியது. பெற்றது. விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சமின்றி நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூர் அணீயை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் வார்னர், முதலில் பெங்களூர் அணீயை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கெய்லே மற்றும் விராத் கோஹ்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் வானவேடிக்கை காண்பித்த கெய்லே, இந்த போட்டியில் ரசிகர்களை ஏமாற்றினார். அவர் 21 ரன்களில் குமாரின் பந்தில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் கேப்டன் தோனி ஓரளவு நிலைத்து ஆடியபோதும் அவர் 41 ரன்களில் அவுட் ஆனார். பெங்களூர் அணியின் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் 46 ரன்கள் எடுத்திருந்தபோதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால், பெங்களூர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, தொடக்கத்தில் இருந்தே தனது அதிரடியை ஆரம்பித்தது. குறிப்பாக ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 27 பந்துகளில் 57 ரன்கள் அடித்து பெங்களூர் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். தவானும் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து மிரட்டினார். இறுதியில் ஐதராபாத் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டக்காரர வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply