shadow

ஐபி.எல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி சாம்பியன். சொந்த மண்ணில் போராடி பெங்களூர் தோல்வி

Sunrisers Hyderabad celebrate the win during the final of the Vivo IPL 2016 ( Indian Premier League ) between The Royal Challengers Bangalore and the Sunrisers Hyderabad held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 29th May 2016 Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா நேற்று இரவுடன் முடிவடைந்தது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி, பெங்களூர் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 38 ரன்களும், கட்டிங் 39 ரன்களும் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் கெய்ல் மற்றும் விராத் கோஹ்லி அதிரடி ஆட்டம் ஆடினர். கெய்ல் 76 ரன்களும் விராத் கோஹ்லி 54 ரன்களும் எடுத்தனர். இருபினும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஆடியதால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை சொந்த மண்ணில் இழந்தது.

ஆட்டநாயகனாக கட்டிங் மற்றும் தொடர் நாயகனாக விராத்கோஹ்லியும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply