shadow

சன்னிலியோனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரஜினி நாயகி

radhikaகடந்த 2014ஆம் ஆண்டு கூகுள் தேடலில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தவர் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் என்பது அனைவரும் தெரிந்ததே. இவருக்கு அடுத்தபடியாகத்தான் பாரத பிரதமர் நரேந்திர மோடியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் சன்னிலியோனின் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை மில்லியன் கணக்கானோர் தேடியதால் இவர் இந்திய அளவில் முதலிடத்தை பெற்றார்.

இந்நிலையில் சன்னிலியோனை இன்னொரு நடிகை தற்போது பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளார். அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாயகி ராதிகா ஆப்தே. சமீபத்தில் இவருடைய நிர்வாண வீடியோ ஒன்று வைரலாக இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி குறும்படம் ஒன்றில் டாப்லெஸ் ஆக நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த குறும்படத்தை கோடிக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இருந்தும் ராதிகா ஆப்தே கூகுள் தேடலில் முதல் பத்து இடங்களில் ஒருவராகத்தான் இருந்தார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தமானார் என்ற செய்தி வெளிவந்தவுடன் அவரை பற்றிய ஏராளமான செய்திகள் இணையதளங்களில் பல மொழிகளில் வெளியானது. எனவே தற்போது சன்னிலியோனை பின்னுக்கு தள்ளிவிட்டு கூகுள் தேடலில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில்தான் தற்போது சன்னிலியோன் உள்ளார்.

Leave a Reply