சன்னிலியோன் கணவர் மருத்துவமனையில் அனுமதி.
sunny leone
பிரபல பாலிவுட் நடிகையும், கனடாவின் ஆபாச நடிகையுமான சன்னிலியோன் கணவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Jism 2, Ragini MMS 2, Current Theega, வடகறி உள்பட பல படங்களில் நடித்த நடிகை சன்னிலியோன். இவருடைய கணவர் டேனியல் வெபர் (Daniel Weber) என்பவருக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சன்னிலியோன் கணவருக்கு tonsillitis என்ற பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்ததாகவும் இதற்காக சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இதுகுறித்து சன்னிலியோன் கூறியபோது, தனது கணவருக்கு ஒருசில சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தனது கணவரின் உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *