1000 கதறி அழுதது ஏன்? சன்னிலியோன் பேட்டி

சமீபத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்து 1000 முறை கதறி அழுததாக பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சன்னிலியோன் வாழ்க்கை அவரது ஒப்புதலோடு குறும்படமாக தயாராகி உள்ளது. சிறுவயது சம்பவங்கள், செக்ஸ் நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களும் இந்த திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த படம் சன்னிலியோனுக்கு சமீபத்தில் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுததாக படக்குழுவினர் கூறினர். இதுகுறித்து சன்னிலியோன் தனது டுவிட்டரில் கூறியபோது,. “ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது. 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சன்னிலியோன் தற்போது தமிழில் வடிவுடையான இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *