shadow

சுந்தர் சி இயக்கும் ’அரண்மனை 3’ படத்தை தயாரிக்கும் ரஜினி தனுஷ் பட நிறுவனம்

சுந்தர் சி இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் ’அரண்மனை 3’என்ற படத்தை இயக்க உள்ளார்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அவர் மீண்டும் தனது வெற்றிப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ரஜினியின் ’தலைவர் 168’ மற்றும் தனுஷின் 44வது படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் ஆர்யா, சுந்தர் சி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். விவேக், யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *