shadow

148d390f-3cb1-4b83-8e92-18fe4c4bc9f7_S_secvpf images (4)

உடல் குளிர்ச்சியுடனும், வறட்சியடையாமலும் இருக்க காய்கறிகள் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடலில் எனர்ஜி குறையாமல், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்க சில காய்கறிகள் உள்ளன.  சரி, இப்போது கோடை வெயிலைத் தணிக்கும் காய்கறிகள் என்னவென்று பார்ப்போம்.

• புடலங்காய் கோடையில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுத்து, உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும். மேலும் கோடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்க உதவுகிறது. விலை குறைவாக புடலங்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்

• மஞ்சள் பூசணி கோடையில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றில் புழுக்கள் சேராமல் தடுக்கும்.

• சுரைக்காயில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால், இதனை கோடையில் வாங்கி அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் சுரைக்காய் வயிற்று பிரச்சனைகளாக அல்சர் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைத் தடுக்கும்.

• வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் 2 முறை சாம்பார் செய்து சாப்பிட்டால், உடல் வறட்சியடையாமல் இருக்கும். மேலும் வெள்ளை பூசணியில் உள்ள நீர்ச்சத்தால், உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு, சிறுநீரக கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

• ஏழைகளின் வள்ளல் வெள்ளரிக்காய். கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்லாமல், வெள்ளரிக்காய் மிகவும் விலைக் குறைவில் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டால், எண்ணற்ற நன்மையைப் பெறலாம்.

• தர்பூசணி பழம் கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கிறது. தர்பூசணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. மேலும் உடலுக்கு குளுமையை தருகிறது. – கோடை காலத்தில் இந்த காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொண்டால் உடலின் நீர்சத்தை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். 

Leave a Reply