சிம்பு பிரச்சனையை விட்டுவிடலாமே? சுஹாசினி கருத்து
suhasini
அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்று சிம்புவை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் தீவிரமாக இருக்கும் நிலை உள்ளது. சிம்பு எந்நேரமும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில் சிம்புவுக்கு எதிராக பல திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவின் பீப் பாடல் குறித்து நடிகை சுஹாசினி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சுஹாசினி இதுகுறித்து கூறியதாவது: ‘நாட்டில் நிறைய கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கும்போது ஒரு பாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குழம்பி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று எனக்கு தோன்றுகிறது. வெள்ள நிவாரண பணி, தேர்வுக்கு படிப்பது போன்ற மற்ற விஷயங்களில் அனைவரும் கவனத்தை செலுத்தலாம்

குறிப்பாக நமக்காக பணிபுரிந்த 10 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்துள்ளார்கள். இதுகுறித்து கவலைப்படாமல் எப்போதும் சினிமா சினிமா என்று இருக்க வேண்டாம். சினிமாவில் இருக்கும் நானே இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுவிடலாம் என்றே நினைக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *