பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் இன்டர்‌நேஷ்நல் இன்டியந் ஃபில்ம் ஃபெஸ்டிவல் ஆஃப் சௌத் ஆஃப்ரிக என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரண்டு நாட்களுக்கு முன்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜோகன்னஸ்பெர்க் சென்றிருந்தார். நேற்று இரவு நடந்த அந்த நிகழ்ச்சியில் 15 மொழிகளில் பாடி சாதனை புரிந்த அவருக்கு சிறப்பு விருது வழங்க இருந்தது. ஆனால் திடீர் உடல்நலக்கோளாறு காரணமாக அவர் உடனடியாக ஜோகன்னஸ்பெர்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

அவரது உடல்நலக்கோளாறு காரணமாக நேற்று இரவு நடக்க இருந்த டின்னர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு எஸ்.பி.பி இன்று இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *