shadow

tamilsaiதமிழக மினவர்களின் படகுகளை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு மீனவர்களை விட்டுவிடுமாறு சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு கூறிய கருத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, தமிழக மீனவர்கள் அப்பாவிகள் என்றும், ஆனால் அவர்களுக்கு படகுகளை கொடுக்கும் படகின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்றும் கூறிய அவர், எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை பிடிக்க வேண்டாம் என்றும், அவர்களுடைய படகுகளை மட்டும் கைப்பற்றி வைத்துகொள்ளுங்கள் என்று தான் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறினார்.

இந்த கருத்துக்கு தமிழக கட்சிகளிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், இந்த கருத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், ‘பா.ஜ.க. தான் தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர்களின் துன்பத்தையும், துயரத்தையும் தீர்ப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply