shadow

அருண்ஜெட்லி ஓட்டல் ஊழியரை போல இருக்கின்றாரா? சு.சுவாமியின் சர்ச்சை டுவீட்
arun jaitley
சர்ச்சைக்குரிய தலைவர் என்று அழைக்கப்படும் பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி முதலில் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம்ராஜனின் கொள்கைகளை விமர்சனம் செய்தார். பின்னர் இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் ஆகியோர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியையும் அவர் மறைமுகமாக தாக்கியுள்ளதால் மத்திய அரசு அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்லும் நமது மந்திரிகளுக்கு ஆடை வி‌ஷயத்தில் அக்கறை செலுத்துமாறு பா.ஜனதா தலைமை அறிவுறுத்த வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் கோட் மற்றும் டை அணிந்து இருக்கும் அவர்களை பார்ப்பதற்கு ஓட்டல் ஊழியர்களை போல் தோற்றமளிக்கின்றனர். இந்திய பாரம்பரியமிக்க நவீன உடைகளை அணியுமாறு மத்திய மந்திரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பேசியுள்ளார்.

சமீபத்தில் சீனாவுக்கு சென்ற போது அருண்ஜெட்லி ஆங்கிலேயர் பாணியில் கோட் மற்றும் டை அணிந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்ஜெட்லி மீது மறைமுக தாக்குதல் தொடுத்துள்ள சுவாமி மீது பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளது.

Leave a Reply