shadow

சி.எஸ்.கே தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுவாமி மனு
subramanian-swamy-4
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகிய 2 அணிகளும் இரண்டு ஆண்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஐ.பி.எல் போட்டியில் இந்த இரு அணிகளும் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது

இன்று சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து தடை விதிக்கப்பட்ட அணிகளில், நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிலருடைய தவறுகளுக்காக ஒட்டுமொத்த அணிக்கும் தடை விதிப்பதை ஏற்க முடியாது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களுக்கே பெருமை சேர்க்கும் அணியாக திகழ்ந்தது. இந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சென்னை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என்று சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா? என தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply