shadow

tamilisai and swamyதேசிய கட்சியின் அங்கமாக இருந்துகொண்டு இந்தியை எதிர்க்கலாமா? என தமிழக பா.ஜனதா கட்சிக்கு, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அகில இந்திய வானொலியில் தினமும் நான்கு மணி நேரம் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. இதற்கு திமுக, பாமக, மதிமுக உள்பட பல்வேறு தமிழக கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழக பா.ஜனதா  தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்களும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள் நிறுத்தம் செய்யப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கு பா.னதா கட்சி தலைவ்ர்களில் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, தேசிய கட்சியின் அங்கமாக இருந்து  கொண்டே அகில இந்திய வானொலியின் இந்தி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்? என தமிழக பா.ஜனதாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
 
“தேசிய கட்சியின் ஒரு அங்கமான மாநில கட்சி வானொலியில் ஒலிபரப்பாகும் இந்தி ஒலிபரப்பை எவ்வாறு எதிர்க்க முடியும். கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? இந்த இந்தி நிகழ்ச்சியைக் கேட்க விரும்பாதவர்கள் தங்களுக்கு பிடித்தமான வேறு நிகழ்ச்சியை மாற்றிக் கொள்ளுங்கள்” என அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply